ஆரணி அருகே முன்னால் நின்ற லாரி மீது மோதி இருசக்கர வாகனத்தில் சென்றதனியார் மருத்துவமனை செவிலியர் கீழே விழுந்த போது பால் டேங்கர் லாரிடயரில் சிக்கி தலை நசுங்கி பலி.

ஆரணி அருகே முன்னால் நின்ற லாரி மீது மோதி இருசக்கர வாகனத்தில் சென்றதனியார் மருத்துவமனை செவிலியர் கீழே விழுந்த போது பால் டேங்கர் லாரிடயரில் சிக்கி தலை நசுங்கி பலி.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பாரதியார் தெரு என்எஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் இவரது இளயமகன் தினேஷ் (29) திருமணமாகி மனைவி 1/5. வயது கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார்.மேலும் தினேஷ் வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தினேஷ் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் ஆரணி-வேலூர் சாலை சேவூர் பேருந்து நிருத்தம் அருகே சென்ற போது அப்பகுதியில் உள்ள உர கடையில் சரக்கு இறக்குமதி செய்து கொண்டிருந்த லாரி மீது தினேஷின் இருசக்கர வாகனம் மோதி நிலைத்தடுமாறி தினேஷ் சாலையில் விழுந்தார்.

அப்போது எதிரே வேலூரில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு வந்த லாரி சக்கரம் தினேஷின் தலை மீது ஏறி இறங்கியது இதில் தினேஷ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ஆரணி அரசு மருத்துவமனையில் சவத்தை பதப்படுத்த பினவரை வசதி இல்லாமல் மருத்துவர்கள் சடலத்தை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் எந்தவித வசதிகள் இல்லாத அரசு மருத்துவ மனை எதுக்கு என்று உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விபத்து சம்பவம் குறித்து கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..