வேலூர் அருகே கழிஞ்சூர் கிராமத்தில் கடந்த 21 தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது அந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார்(23) தனது நண்பர்களுடன் இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப் உடையை அணிந்து சினிமா பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியாக பார்த்தனர்
இதையடுத்து கழிஞ்சூர் கிராம நிர்வாக அலுவலர் ஆசீர்தங்கராஜ் விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரில் அருண்குமார் தனது நண்பர்களுடன் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் உடை அணிந்து சினிமா பாடலுக்கு நடனம் ஆடியது முஸ்லிம் மதத்தினரை புண்படுத்தும் வகையிலும் அவர்கள் அணியும் உடையை அணிந்து கலகம் மற்றும் கிளர்ச்சி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்
புகாரைப் பெற்றுக் கொண்ட விருதம்பட்டு காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் உடையை அணிந்து சினிமா பாடலுக்கு நடனமாடி இரு மதங்களுக்குள் வெறுப்பை உண்டாக்கிய வாலிபர் அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
மேலும் அருண்குமாருடன் நடனமாடிய சக நண்பர்களை வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.