உலக கோப்பை கிரிக்கெட்: அஸ்வின் உள்ளே – அக்சர் படேல் வெளியே

உலக கோப்பை கிரிக்கெட்: அஸ்வின் உள்ளே – அக்சர் படேல் வெளியே

புதுடில்லி: உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஷ்வின் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

50 ஓவர்கள் கொண்ட ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில், அக்டோபர் -நவம்பர் மாதங்களில் நடக்கவுள்ளது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.

தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் இடம்பெற்றிருந்த அக்சர் படேல் காயம் காரணமாக இன்னும் குணமடையவில்லை. இதனையொடுத்து அவருக்கு பதிலாக தமிழக வீரர் அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மைதானத்தில் உள்ள ஆடுகளத்தை நன்கு அறிந்து அஸ்வின் பந்தை வீசுவார் என்ற ரசிகர் மத்தியில் எதிர் பார்க்கப்படுகின்றன..

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..