ஆரணி கிளைச் சிறை 250 சதுர அடியில் 2 பெரிய அறைகள் உட்பட 5 லாக்-அப் சிறையில் சுமார் 17பேர் வரையில் அடைத்து வைக்கலாம். ஒவ்வொரு லாக்-அப்பிலும் ஒரு கழிப்பறை மற்றும் ஒரு சீலிங் பேன் உள்ளன மின்விளக்குகள் இல்லாத நிலையில் இருந்தன.
மேலும் விதிமுறைகளின்படி, ஒரு துணைச் சிறையில் ஒரு வார்டன், ஒரு சமையல்காரர் மற்றும் ஒரு ஊழியர் உட்பட 13 பேர் பணியில் ஈடுபடுவார்கள். ரிமாண்ட் கைதிகள், பெரும்பாலும் சிறிய குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் துணை சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை பெற்று இயங்கியது.
கிளை சிறை பற்றிய தொகுப்பு
ஆரணி நகரின் கோட்டை மைதானம் அருகே கிளைச் சிறை இயங்கி வந்தன இந்த கிளை சிறை கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் குதிரை வளாகமாக இருந்து வந்தன அதன் பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1983ம் ஆண்டு முதல் விசாரணை கைதிகளை அடைத்து வைப்பதற்காக ஆரணி கிளைச் சிறை என மாற்றபட்டது.
ஆரணி உட்கோட்டத்தில் ஆரணி டவுன் ஆரணி கிராமிய காவல் நிலையம் களம்பூர் சந்தவாசல் கண்ணமங்கலம் மற்றும் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவை உள்ளிடக்கி உள்ள காவல் நிலையங்களில் இருந்து வழக்கு பதிவு செய்து விசாரணை கைதிகளை ஆரணி கிளை சிறையில் பாதுகாப்பாக அடைத்து வைப்பது வழக்காமாகும்.
மேலும் ஆரணி உட்கோட்டம் மட்டுமின்றி வந்தவாசி செய்யாறு போளூர் செங்கம் ஆகிய பகுதிகளில் உள்ள விசாரணை கைதிகளில் அதிகளவில் உள்ள விசாரணை கைதிகளை ஆரணி கிளை சிறையில் அடைக்கப்படுவார்கள் 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கிளைச் சிறை 2013ம் ஆண்டு சிறை கட்டிடங்களில் உள்ள மேற்கூரைகள் சிதலமடைந்துள்ளதாக கூறி பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டன.
அதன் பின்பு பராமரிப்புகள் பணி முடிக்கப்பட்டு 2019ம் ஆண்டு திறக்கப்படும் என எதிர்பார்த்து இருந்த நிலையில் கிளை சிறைத் திறக்கப்படவில்லை தற்பொழுது 10 ஆண்டுகள் ஆகியும் கிளை சிறை இன்னும் பயன்பாட்டுக்கு வராத நிலையில் உள்ளன. இதனால் ஆரணி உட்கோட்ட காவல் நிலையங்களில் சிறு சிறு குற்றங்கள் செய்து ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆரணி கிளை சிறை இல்லாத காரணத்தால் விசாரண கைதிகளை போளூர் வந்தவாசி திருவண்ணாமலை செங்கம் பகுதிகளில் உள்ள கிளை சிறையில் அடைக்கபடுகின்றனர்..

ஆரணி உட்கோட்ட காவல்நிலையத்திலிருந்து விசாரணை கைதிகளை அழைத்து செல்ல காவல்துறையினர் விசாரணை கைதியிடம் கார் போன்ற வாகனங்களை விசாரணை கைதியின் செலவில் வைக்க சொல்லி வற்புறுத்துகின்றனர். இதனால் வசதியில்லாத விசாரணை கைதிகள் பெரிதும் பாதிக்கபடுவதாகவும் வேதனையில் தெரிவிக்கின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைத்து காவல் நீட்டிப்பிற்கு சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் வர காவல்துறையினர் சிரமபடுவதாகவும்; காவல்துறையினரும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் 10 ஆண்டுகளாக பயன்பாடின்றி மூடி கிடக்கும் ஆரணி கிளைச் சிறையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பு பொதுமக்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்…