கண்ணமங்கலம் பத்திரபதிவு அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை லஞ்ச ஓழிப்பு துறையினர் களையெடுப்பார்களா..? – இடைதரகர்கள் பிடியில் பத்திர பதிவு அலுவலகம்

கண்ணமங்கலம் பத்திரபதிவு அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை லஞ்ச ஓழிப்பு துறையினர் களையெடுப்பார்களா..? – இடைதரகர்கள் பிடியில் பத்திர பதிவு அலுவலகம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பத்திர பதிவு அலுவலகத்திலிருந்து பிரிந்து கண்ணமங்கலம் பேரூராட்சியில் துணை பத்திர பதிவு அலுவலமாக செயல்பட்டு கண்ணமங்கலம் சுற்றியுள்ள சுமார் 35க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளிடக்கியுள்ளன.

மேலும் இந்த துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களது வீட்டுமனை பட்டா மற்றும் விளை நிலங்கள் பத்திர பதிவு திருமணப் பதிவு வில்லங்கம் பதிவு செய்து கணினியில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்த துணை பத்திரவு அலுவலகத்தில் தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட பத்திர பதிவுகள் முகூர்த்த நாட்களில் அதிகளவில் பத்திர பதிவு நடைபெற்று வருகின்றன. 

இதில் சார் பதிவாளராக செய்யார் பகுதியை சேர்ந்த பழனி 2 அரசு ஊழியர்களும் தற்காலிக பணியாளர்களாக 2பேர் உள்ளிட்ட 5பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் கண்ணமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வீட்டு மனை பத்திர பதிவு அடமானம் பதிவு வில்லங்கம் போன்ற பதிவிற்கு பயனாளிகள் நேரரிடையாக சென்று பதிவு செய்ய முடியாமல் அலுவலகம் வெளியே இடைதரகர்கள் மூலம் பதிவு நடைபெறுவதால் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டவர்களுக்கு இட மதிப்பீடு தொகையை இடைதரர்கள் நிர்ணயம் செய்ய கூடிய நிலையில் கண்ணமங்கலம் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது என வேதனைகுரிய விஷயமாக உள்ளன.

இடைதரகர்கள் இல்லாமல் நேரரிடையாக செல்லும் பயனாளிகளின் மனுக்கள் நிராகரிக்கபடுவதாகவும் தற்போது கண்ணமங்கலம் சார்பதிவாளர் அலுவலகம் இடைதரகர்களின் பிடியில் சிக்கி தவிப்பதால் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஓழிப்பு துறை நடவடிக்கை எடுக்குமா என கிராம பொதுமக்கள் எதிர்பார்ப்பு…?

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..