உங்கள் குழந்தைக்கு பான் கார்டு ஏன் அவசியம்? குழந்தைக்கு பான் கார்டு விண்ணப்பம் செய்வது எப்படி?

உங்கள் குழந்தைக்கு பான் கார்டு ஏன் அவசியம்? குழந்தைக்கு பான் கார்டு விண்ணப்பம் செய்வது எப்படி?

இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணங்களில் ஒன்றாக பான் கார்டு கருதப்படுகிறது . பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கும் பான் கார்டு அடையாள ஆவணமாக கேட்கிறார்கள். உதாரணமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் தொடங்கி ஒரு வங்கி கணக்கு தொடங்க வேண்டும் அல்லது ஒரு முதலீட்டினை தொடங்க வேண்டும் என்பன போன்ற முக்கியமான நடவடிக்கைகளுக்கு எல்லாமே பான் எண் கட்டாயமாக கேட்கப்படுகிறது.

பான் கார்டு என்பது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது கிடையாது உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கூட நீங்கள் பான் கார்டு வாங்க முடியும். வருமான வரி சட்டத்தின் பிரிவு 160இன் கீழ் இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியருக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.

இதனை மைனர் பான் கார்டு என அழைக்கிறார்கள். இந்த பான் கார்டு குறிப்பிட்ட சிறுவர் அல்லது சிறுமியின் பெயரில் வழங்கப்படும். ஆனால் இதனை அவர்களின் பெற்றோர் அல்லது கார்டியன்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு அந்த கார்டனை பயன்படுத்தலாம். 18 வயது நிரம்பியவுடன் அவர்களுடைய கையெழுத்து மற்றும் புகைப்படத்தை கொண்டு பெரியவர்களுக்கான பான் கார்டு ஆக அதனை அப்டேட் செய்து கொள்ள முடியும்.

குழந்தையின் பெயரில் ஒரு கணிசமான தொகையை முதலீடு செய்கிறீர்கள் எனும் போது அவர்களுக்கு என பான் கார்டு இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோல உங்களுடைய நிதி சார்ந்த முதலீடுகளுக்கெல்லாம் நாமினியாக உங்கள் குழந்தைகளை சேர்க்கிறீர்கள் என்றாலும், உங்கள் குழந்தையின் பெயரில் வங்கி கணக்கு தொடங்கும்போதும் பான் கார்டு கேட்கப்படுகிறது.

குழந்தைக்கு பான் கார்டு விண்ணப்பம் செய்வது எப்படி?

NSDL தளத்திற்கு சென்று “Online PAN Application” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

“New PAN – Indian Citizen (Form 49A)” மற்றும் “Individual” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

குழந்தையின் முழுமையான பெயர், பிறந்த தேதி மற்றும் உங்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை உள்ளிட வேண்டும்

captcha codeஐ சரியாக உள்ளிட்டு விண்ணப்பத்தை சப்மிட் செய்திட வேண்டும்.

இதனை அடுத்து ஸ்கீரினில் உங்களின் டோக்கன் எண் காண்பிக்கப்படும், அதனை குறித்து கொண்டு “Continue with PAN Application Form” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் “Forward application documents physically” என்பதை தேர்வு செய்திட வேண்டும்.

ஆதார் எண்ணில் கடைசி நான்கு இலக்கத்தை உள்ளிட்டு மேலே குறிப்பிட்ட தகவல்களை சரிபார்க்க வேண்டும்.

குழந்தையின் பெற்றோர் அல்லது கார்டியனின் விவரங்கள், வருமான விவரங்கள் மற்றும் பிற தேவையான தகவல்களை உள்ளிட வேண்டும்

விண்ணப்ப கட்டணம் ரூ.107ஐ செலுத்திவிட வேண்டும்.

இதன் பின்னர் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு பான் கார்டு 15 நாட்களில் உங்கள் வீட்டிற்கே வந்து சேர்ந்துவிடும்.


PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..