வாலாஜாபேட்டை அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் நடைபெற்ற பங்குனி மாத பிரம்மோற்சவ தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா அரோகரா என்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்..

வாலாஜாபேட்டை அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் நடைபெற்ற பங்குனி மாத பிரம்மோற்சவ தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா அரோகரா என்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்..

வாலாஜாபேட்டை அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் நடைபெற்ற பங்குனி மாத பிரம்மோற்சவ தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா அரோகரா தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்..

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பூக்கார தெருவில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த காமாட்சி அம்பாள் ஸமேத ஏகாம்பரநாதர் திருகோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ தேர் திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து 10 நாட்கள் காலை இரவு என இருவேளைகளிலும் மூலவர் காமாட்சி அம்பாள் ஏகாம்பரநாதர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று திருவீதி உலா நடைபெற்றது..

இந்த நிலையில் 7-ம் நாளான இன்று காலையில் சுவாமிக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது பின்னர் மாலை 5 மணி அளவில் காமாட்சி அம்பாள் ஏகாம்பரநாதர் சுவாமிக்கு பல்வேறு புஷ்பா மலர்களை கொண்டு அலங்கரித்து தேரில் கம்பீரமாக அமர்ந்து சிவமேளம் செண்டைமேளம் கேரளா மேளம் நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை இருந்து தொடங்கி சோளிங்கர் செல்லும் சாலையின் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து அரோகரா அரோகரா அரோகரா என பக்தி கோஷங்களை வெளிப்படுத்தி தேரினை வடம் பிடித்து இழுத்து சென்று சுவாமியை வழிபட்டனர்..

முன்னதாக தேர் திருவிழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள்..

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..