ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த பூண்டி கிராமத்தில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ த்ரௌபதி அம்மன் திருக்கோயிலில் அக்னி வசந்த மகாபாரத திருவிழா கடந்த மாதம் 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் மகாபாரத சொற்பொழிவும் இரவு கட்டை கூத்து குழுவினாரால் நாடகம் நடைபெற்று வந்த நிலையில் மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வான 18-ஆம் போரில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது அப்போது கோவில் அருகாமையில் உள்ள மைதானத்தில் 100 அடி நீளம் கொண்ட துரியோதனன் பிரம்மாண்ட உருவம் கொண்ட மண் சிற்பத்தால் வடிவமைக்கப்பட்டிருந்த துரியோதனன், பீமன் வேடமிட்ட நாடக கலைஞர்கள் தண்டாயுதங்கள் ஏந்தி சண்டையிடும் காட்சியும் அதேபோன்று மூன்று முறை துரியோதனனின் மண் சிற்பத்தை வளம் வந்த பின்னர் பீமன் துரியோதரன் தொடைப்பகுதியில் ஓங்கி அடித்து கிராம பொதுமக்கள் மத்தியில் தத்ரூபமாக துரியோதனன் படுகளம் செய்யப்படும் நிகழ்வை நடித்துக் காட்டினார்கள்..
தொடர்ந்து கூட்டத்தின் மத்தியில் வந்த துரியோதனன் தாயார் காந்தாரி இறந்த மகனை பார்த்து ஒப்பாரி வைத்து அழுகின்ற காட்சி இடம்பெற்று இருந்தது மேலும் இந்த அக்னி வசந்த விழாவில் பூண்டி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு த்ரௌபதி அம்மன் பக்தி மனத்தோடு வழிபட்டு சென்றனர்..