திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர்(58) இவர் பி.ஜே.பி கட்சியில் இணைந்து பல நலத்திட்ட உதவிகள் மற்றும் மக்களின் நலப்பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
மேலும் அரசு பணியை துறந்து விருப்ப ஓய்வு பெற்று முழுமையாக பி.ஜே.பி கட்சியில் முழு நேர அரசியல்வாதியாக உருவெடுத்து பி.ஜே.பி கட்சியின் கொள்கைளை கடைப்பிடித்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றார்.
இதனையொடுத்து விருப்ப ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வ.சங்கருக்கு மத்திய அரசின் நலதிட்ட குழு செயலளராக பணியாற்ற பி.ஜே.பி கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.
பொறுப்பை ஏற்று விருப்ப ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கருக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.