கண்டுகொள்ளப்படாத திருவண்ணாமலை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்கள்.. உயிருக்கு ஆபத்தான முறையில் வாழ்ந்துவரும் மக்கள்

கண்டுகொள்ளப்படாத திருவண்ணாமலை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்கள்.. உயிருக்கு ஆபத்தான முறையில் வாழ்ந்துவரும் மக்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களின் எல்லையோரம் ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன..

எல்லையில் உள்ள கிராமங்கள், வீடு, கழிப்பிடம், பேருந்து என எந்த வசதிகளும் இல்லாமல் அவலநிலையில் உள்ளன. பல ஆண்டுகளாக அரசின் எந்த திட்டங்களும் சென்று சேராததால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது..

திருவண்ணாமலை மாவட்டத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களின் எல்லையோரம் ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன…

இங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலையில், அரசின் திட்டங்கள் சென்றடையாமல், வேறொரு மாநிலத்தில் இருப்பதைப் போன்று வாழ்ந்து வருகின்றனர் இப்பகுதி மக்கள்..

குறிப்பாக நீட் தேர்வில் மாநில அளவில் 4ஆம் இடம் பிடித்த மாணவி ரோஜாவின் ஊரான அம்மணம்பாக்கத்திற்கு பேருந்து வசதியே இல்லை.. சுமார் 7 கிலோ மீட்டர் நடந்து சென்றால்தான் பேருந்தைப் பார்க்கவே முடியும்.. அண்டை கிராமங்களிலும் இதே நிலை தான்…

அம்மணம்பாக்கத்தில் செய்தி சேகரிக்கச் சென்றபோது, அருகே இருந்த புன்னை கிராம மக்களும் தங்களது பரிதாப நிலையை பதிவு செய்யுமாறு கோரினர். அங்கு சென்றபோது, புன்னை கிராம மக்கள் சேதமடைந்த வீடுகளில் உயிருக்கு ஆபத்தான முறையில் வாழ்வதை காண முடிந்தது… இதே போன்று கழிப்பிட வசதிகளும் இல்லாதால் கடும் அவதிக்கு உள்ளாவதாக வேதனை தெரிவிக்கின்றனர்… சாலைகளும் குண்டும் குழியுமாக காணப்படுவதால், தபால்காரர்களும் இந்த பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை..

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அளித்த புகார்களோ, நீரில் போட்ட கல் போன்று கிடக்கின்றது என கூறுகின்றனர் புன்னை கிராம மக்கள்…

எந்த வித அடிப்படை வசதியுமின்றி தவித்து வரும் திருவண்ணாமலை மாவட்ட எல்லையோர கிராமங்களின் குரல், அரசின் செவியை எட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது….

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..