திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயற்கை விவசாயிகள் மற்றும் மரபுகள் கண்ணமங்கலம் ஆகியோர் சார்பில் ஊர்தோறும் உணவு திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் பொதுமக்களுக்கு ஆரோக்யாமான உணவுகள் அடுப்பில்லா உணவு பண்டை காலங்களில் நம் முன்னேர்கள் வாழ்ந்த போது உண்ட உணவுகள் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் கொண்டு வர புதிய முயற்சியாக இயற்கை விவசாயிகள் ஓன்றுணைந்து சம்பா பழ கேசரி, கிச்சலி சம்பா சாதம், கோளச்சோறு வெப்பாலை, காரக்குழம்பு, கொடம்புளி ரசம், மாஇஞ்சி, மோர், சிறுதானிய தயிர்சாதம் நாட்டுமாட்டு தயிர் பூரி, முளைதானிய மசாலா பூரி, வாழக்காய் பக்கோடா, முடவாட்டு கிழங்கு கஞ்சி, கேப்ப கூழ், உள்ளிட்ட பல்வேறு வகையான பண்டை கால உணவை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடைகள் அமைத்து விற்பனை செய்யபடுகின்றன.
மேலும் சிறப்பு உணவாக மதிய வேலையில் பாரம்பரிய உணவான சந்துகளி என்ற களியை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து அதனுடைய சிறப்பு தன்மைகளை எடுத்துரைத்தனர்.
இந்த திருவிழாவில் செம்பருத்தி ஜீஸ் பருத்தி பால் நாட்டுமாட்டு பால் கொண்ட குல்பி ஐஸ் வகைகைள பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உற்சாகத்துடன் விரும்பி வாங்கி உண்டனர். பண்டைகால முறையை கொண்ட இளவட்டகல்லை இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தூக்கி அசத்தினார்கள். இதில் வேளாண் மற்றும் தோட்டகலை கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குழந்தைகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.