திமுக கூட்டணி கணக்கு அனைத்தும் மைனஸ் ஆகும்… திருமா மனசு முழுக்க முழுக்க நம்முடன் தான் இருக்கும் – “அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழாவில் விஜய் தடாலடி பேச்சு.!

திமுக கூட்டணி கணக்கு அனைத்தும் மைனஸ் ஆகும்… திருமா மனசு முழுக்க முழுக்க நம்முடன் தான் இருக்கும் – “அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழாவில் விஜய் தடாலடி பேச்சு.!

விசிக துணைப் பொதுச் செயலாளரும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனருமான ஆதவ் அர்ஜூனாவின் ‘எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற நூலின் வெளியீட்டு விழா,நேற்று சென்னை நடக்கிறது.

விகடன் பதிப்பகம் வெளியீடும் இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு, தவெக தலைவரும் நடிகருமான விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நூலை வெளியிடுகிறார். இவ்விழாவில் பங்கேற்ற விஜய் பேசியதாவது:

இந்த விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன். எல்லாருக்கும் பிடித்த தங்கும் இடம் என்ன என்று கேட்டால், நியூயார்க் என்பார்கள். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன், அங்கு போய் படித்து சாதித்தவர் ஒருவர் இருந்தார். அவர் எந்த சூழலில் படித்து சாதித்தார் என்பது பெரிய விசயம். நீ இந்த சாதியில் பிறந்து ஏன் இப்படி பண்ற என்று அவர் சார்ந்த மக்களே அவரை பேசினர். அத்தனை சக்திகளும் எதிராக இருந்த போதும், ஒரு சக்தி மட்டும் தான் தொடர்ந்து படிக்க சொன்னது. அது தான் அந்த மாணவர் உள்ளே இருந்த வைராக்யம். அந்த வைராக்யம் தான், அவரை பின்னாளில் அந்த மாணவரை சட்டம் இயற்ற வைத்தது. அந்த மாணவர் தான் அம்பேத்கர்.

வன்மத்தை காட்டிய இந்த சமூகத்திற்கு, அவர் திரும்ப என்ன செய்தார் என்பது தான் அவரின் சாதனை. நம் நாட்டில் அரசியல் சாசன சட்டத்தை வழங்கி, நமக்குப் பெருமை தந்தவர். 9 வயதாக இருக்கும் போது வெளியூரில் இருக்கும் அப்பாவை காண, சகோதரருடன் சென்ற போது, அவரை வண்டியில் ஏற்ற மறுத்துள்ளனர். இன்று நம் நாடு முழு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால், ஜனநாயகத்தின் ஆனிவேர், சுதந்திரமான தேர்தல், நியாயமான தேர்தல் வேண்டும்.

தேர்தல் ஆணையர்கள், ஒருமித்த அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும். அம்பேத்கர் பிறந்தநாளில் ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும். அதை இந்திய ஒன்றிய அரசு செய்ய வேண்டும். இன்றும் மனிப்பூரில் என்ன நடக்குது என்று நமக்கு நன்றாக தெரியும். அதை கண்டுக்கவே கண்டுக்காம ஒரு அரசு மேலே ஆண்டு கொண்டிருக்கிறது.

அங்கே தான் அப்படி என்றால், இங்கே இருக்குற அரசு எப்படி இருக்கு? தமிழ்நாட்டில் வேங்கை வயல் என்கிற ஊரில் என்ன நடந்தது? சமூக நீதி பேசும் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? இத்தனை ஆண்டுகளில் ஒரு துரும்பைக் கிள்ளிப் போடவில்லை. இதைப் பார்த்தால் அம்பேத்கர் வெட்கப்படுவார். பெண்களுக்கு எதிராக, பெண்குழந்தைகளுக்கு எதிராக, மனித உயிர்களுக்கு எதிராக நடப்பதை நாம் பார்க்கிறோம்.

இங்கு சம்பிரதாரத்திற்காக மக்களுடம் இருப்பதைப் போல நடிக்கிறார்கள். சம்பிரதாயத்திற்காக மழைநீரில் போட்டோ எடுப்பதில் எனக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை. என்ன செய்வது, நாமும் சம்பிரசாயத்திற்கு அது போல செய்ய வேண்டியுள்ளது. நானும் மக்களுடன் உரிமைகளுக்காகவும், உணர்வு பூர்வமாகவும் இருப்பேன், எப்போதும் அப்படி தான் இருப்பேன். மக்களின் உணர்வை மதிக்க தெரியாதா, மக்களின் சமூக நீதி பாதுகாப்பை உறுதி செய்யாத கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி , இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு நான் விடும் எச்சரிக்கை, ‘நீங்க உங்களோடு சுயநலத்திற்காக நீங்கள் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும், 2026ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்’.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், வரமுடியாமல் போனது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு, கூட்டணி கட்சி சார்பில் எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்போ சொல்றேன், அவருடைய மனது, முழுக்க முழுக்க நம்முடன் தான் இருக்கும்,” என்று அந்த விழாவில் விஜய் தடாலடியாக பேசி முடித்தார்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..