கர்நாடக அரசை கண்டித்து அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயி சங்கம் போராட்டம் வேலுச்சாமி பேட்டி.

கர்நாடக அரசை கண்டித்து அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயி சங்கம் போராட்டம் வேலுச்சாமி பேட்டி.

கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை உச்சநீதிமன்றம் உத்தரவு மதிக்காமல் காவிரியில் தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விட மறுப்பதை கண்டித்தும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசின் மெத்தன போக்கை கண்டித்தும் தமிழ்நாட்டிலிருந்து கடலூர் மாவட்டம் நெய்வேலி அனல் மின் நிலையம் மூலம் கர்நாடகாவிற்கு மின்சார உற்பத்தியை நிறுத்தி கர்நாடகாவிற்கு மின்சாரம் துண்டிப்பு ஏற்படுத்தும் வகையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் வருகின்ற 09.10.2023 திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு நெய்வேலி அனல் மின் நிலையத்தை மின்சாரம் உற்பத்தி நிலையத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளனர்.

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. அது சமயத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் மற்றும் பொதுமக்களும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் சமூக ஆர்வலர்கள் இ அரசியல் கட்சியினர் விவசாயத்தை காப்பதற்கும் காவிரி உரிமையை கர்நாடகா மாநிலத்தில் அராஜகத்தை மீட்டு எடுப்பதற்கும் அனைத்து தரப்பினரும் அணி திரண்டு வந்து நெய்வேலி அனல் மின் நிலையத்தில் மின்சாரம் துண்டிப்பு ஏற்படுத்தும் வகையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் அனைவரும் அணி திரண்டு வந்து முற்றுகை போராட்டத்திற்கு கலந்துகொள்ளும்படி அனைத்து தரப்பினரையும் அழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..