திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே ஆரணி வேலூர் சாலையில் வல்லம் கிராமத்தின் கூட்ரோடு அருகில் டோல்கேட் அமைந்துள்ளன. இந்நிலையில் அணைகட்டு தொகுதி டி.சி.குப்பம் என்ற தேவி செட்டி குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் தனது ஆதரவாளர்களுடன் ஆரணியிலிருந்து வேலூர் செல்வதற்கு டோல்கேட் வழியாக தனது 2 காரில் சென்றுள்ளார்.
அப்போது டோல்கேட் ஊழியர்கள் காருக்கு சுங்க வசூல் கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மணிமாறன் மற்றும் தனது ஆதரவாளர்களை பணம் தர மறுத்து காரில் ஏறி டோல்கேட் இருந்து ஏறி முற்பட முயன்றனர்.
பின்னர் டோல்கேட் ஊழியர்கள் காரை தடுத்து நிறுத்தி சுங்க வசூல் கேட்டதாகவும் இதனால் மீண்டும் இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டு மணிமாறன் மற்றும் ஆதரவாளர்கள் கண்மூடி தனமாக டோல்கேட் ஊழியர்களை தாக்கினார்கள். இதில் படுகாயமடைந்த பெண் உட்பட 3 ஊழியர்கள் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலிறந்த வந்த கணியம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து டோல்கேட் ஊழியர்களை ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் மற்றும் ஆதரவாளர்கள் ஊழியர்களை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன. இதில் ஆம்பூலன்ஸ் வாகன செல்ல வழிமறித்து தொடர்ந்து ஊழியர்களை தாக்கும் காட்சி சிசிடிவி பதிவாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன…
செய்தியாளர் ம.மோகன்ராஜ்