திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி சாலை மையப்பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருவதால் குடிமகன்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பஜார் வீதியில் டாஸ்மாக் கடை இயங்குவதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்து நிற்பதால் பஜார் வீதியில் பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் இந்த பகுதியில் செல்ல சிரமத்துகுள்ளாயி வருகின்றனர்.
இதனால் பஜார் வீதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் மற்றும் வணிகர்கள் ஆகியோர் ஓன்றுணைந்து பஜார் வீதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
அதே போல புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் கிராமத்தில் அகற்றபட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கடைவீதியில் செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் கடைகள் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இதனையொடுத்து மீண்டும் அதே இடத்தில் கடை திறக்க முயன்ற போது பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் மீண்டும் கடையை மாவட்ட நிர்வாகம் மூடியது.
இந்நிலையில், மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் அதே இடத்தில் திறக்க கோரி வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சம்மந்மாக வணிகர்களிடம் கேட்டதற்கு : பொதுமக்களின் எதிர்ப்பால் டாஸ்மாக் கடையை மாவட்ட நிர்வாகம் மூடியது ஆனால் கள்ளதனமாக மதுவிற்பனை படூஜோராக அதிக விலைக்கு விற்பனை நடைபெற்று வருவதால் தனியார் கொள்ளை லாபம்யடைவதாகவும் இதனால் அரசே டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என்று வணிகர்கள் தெரிவித்தனர். டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று ஆரணியில் வணிகர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடையை திறக்க கோரி வணிகர்கள் கடையடைப்பபு போராட்டம் நடத்துவதால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் குழப்பத்தில் உள்ளன.