ஆரணியில் சூறாவளி காற்றுடன் மழை மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பம் மீது விழுந்து உடைந்தன.

ஆரணியில் சூறாவளி காற்றுடன் மழை மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பம் மீது விழுந்து உடைந்தன.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ந்தன இதனால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கபட்டன.

மேலும் ஆரணி பழைய ஆற்காடு ரோடு அருகே சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்ந்ததால் சாலை ஓரமாக இருந்த புளிய மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பம் மீது மரம் விழுந்ததால் மின்கம்பம் உடைந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால் உயிர் சேதம் தவிர்க்கபட்டன.

இதனையொடுத்து தகவலறிந்த வந்த ஆரணி தீயணைப்பு துறை மற்றும் மின்சார வாரிய துறையினர் மின் இணைப்பை துண்டித்து மரம் அப்புறபடுத்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மரம் வேரோடு சாய்ந்து விழுந்த சம்பவம் ஆரணியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..