திருவண்ணாமலை, சென்னை, கரூர், திருச்சி, கோவையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் 5 நாளாக நேற்றும் வருமான வரித் துறையினர் சோதனை நடைபெற்று.
திருவண்ணாமலை அருகே உள்ள தென்மாத்தூரில் பகுதியில் உள்ள எ.வ.வேலுவின் வீடு, சரஸ்வதி அம்மாள் அறக்கட்டளை கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 11 இடங்களில் 5-வது நாளாக நேற்றும் சோதனை நடைபெற்று.
அமைச்சருக்கு சொந்தமான மற்றும் நெருக்கமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத பணம் சிக்கி உள்ளதாக தகவலும் வெளியாகி உள்ளது..
மேலும் கைப்பற்றப்பட்ட பணத்தை, திருவண்ணாமலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் வருமான வரித்துறையினர் செலுத்தி உள்ளனர். இதுவரை 20 கோடி செலுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது..
குறிப்பாக திருவண்ணாமலை, சென்னை, கரூர், திருச்சி, கோவையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனையானது நடைபெற்றது…
சென்னையில் அமைச்சர்தொடர்புடைய 20 இடங்களில் மட்டும் சோதனை நடைபெற்றது. மேலும் பறிமுதல்செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்..
கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள பார்சன் குடியிருப்பு வளாகத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயக்குமாரின் வீடு அவரதுமகன் ஸ்ரீராமுக்குச் சொந்தமாக பீளமேட்டில் உள்ள உணவு மற்றும் கட்டுமானம் சார்ந்த நிறுவனம், சவுரிபாளையத்தில் உள்ள தனியார் கட்டுமான அலுவலகம் ஆகிய இடங்களில் 5 நாட்களாக சோதனை நடைபெற்றது. இதில்பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கட்டுமான நிறுவனத்தில் ஏற்கெனவே இயக்குநராகப் பணியாற்றியவரின் சிங்காநல்லூரில் உள்ள வீட்டில் நடத்தப்பட்ட சோதனை நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது..
கரூரில் அமைச்சர் எ.வ.வேலுவின் உதவியாளர் சுரேஷின் வீடு,காந்திபுரத்தில் உள்ள நிதி நிறுவனம் ஆகிய 2 இடங்களில் 5-வதுநாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது. கண்ணதாசன் சாலையில் வசித்து வரும் மணப்பாறையைச் சேர்ந்த தொழிலதிபர் சாமிநாதனின் வீட்டுக்கு நேற்று காலை வந்த வருமான வரித் துறை அதிகாரிகள், அங்கு சோதனை நடத்தினர். மேலும், சாமிநாதன், அவரது மனைவியை அழைத்துச் சென்று, அவர்களது வங்கி லாக்கர்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்..
இந்நிலையில்தான், அருணை வெங்கட் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். கணினிகளில் உள்ள தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், முக்கிய ஆவணங்கள், ரொக்கம் சிக்கியுள்ளதாகவும், பல வங்கிகளின் லாக்கர்களில் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, அருணை வெங்கட்டின் தொழில் சார்ந்த முதலீடுகள் குறித்து அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அமைச்சர் எ.வ.வேலுவுக்கு இணையாக, அருணை வெங்கட்டையும் இலக்குவைத்து வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளது, திருவண்ணாமலை மாவட்ட திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது..