வந்தவாசி அருகே பைக்கில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் அரசு பேருந்து மோதிய விபத்தில் சம்பவடத்திலேயே துடிதுடித்து பலி வந்தவாசி போலீசார் விசாரணை.

வந்தவாசி அருகே பைக்கில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் அரசு பேருந்து மோதிய விபத்தில் சம்பவடத்திலேயே துடிதுடித்து பலி வந்தவாசி போலீசார் விசாரணை.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேத்துறை கிராமத்தின் கூட்ரோடுஅருகில் வந்தவாசி காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்திலிருந்த பாண்டிச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து மீது வந்தவாசியிலிருந்து காஞ்சிபுரத்திற்கு சென்ற ஓரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் பைக்கில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானது.. இதில் பைக்கில் வந்த வெடால் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் பிரியா மற்றும் திலகஷனா என்ற சிறுமி உட்பட 3பேர் சம்பவடத்திலேயே பலியானார்கள்..

தகவலறிந்த வந்த வந்தவாசி போலீசார் பைக்கில் வந்த 3பேரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்க அனுப்பி வைத்து அரசு பேருந்தை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் போலீசாரின் விசாரணையில் வந்தவாசி அருகே வெடால் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் தனியார் டிரான்ஸ்போர்டு கம்பெனியில் பணிபுரிந்து வருவதாகவும் தனது குடும்பத்துடன் காஞ்சிபுரத்தில் வசித்து வருவதாகவும் நேற்று முன்தினம் தனது சொந்த கிராமத்தில் திருவிழாவிற்காக வந்து மீண்டும் காஞ்சிரபுரம் பைக்கில செல்லும் போது விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளன என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன..

ஓரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் விபத்தில் இறந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..