மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமாவளவனிடம் எடப்பாடி நலம் விசாரிப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமாவளவனிடம் எடப்பாடி நலம் விசாரிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல்நலன் விசாரித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உடல்நலன் விசாரித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற எம்.பியுமான திருமாவளவன் நேற்று காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவருக்கு பரிசோதனை செய்ததில் சாதாரண காய்ச்சல் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவர் உடல்நலத்துடன் இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 30 ஆம் தேதிவரை கட்சி தொண்டர்கள் அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சந்திக்க வரவேண்டாம் என விசிக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு திருமாவளவனிடம் நலம் விசாரித்துள்ளார். டெல்லியில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பங்கேற்றார்.

அதேபோல், சென்னை முதல் நெல்லை வரையிலான வந்தே பாரத் துவக்க நிகழ்ச்சி, காங்கிரஸ் ஒபிசி பிரிவு சார்பாக நடைபெற்ற கருத்தரங்கம் என தொடர் பயணம் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..