இந்தியாவில் 10கோடி மலைவாழ் பொதுமக்கள் உள்ளனர் இதில் 40 லட்சம் மலைவாழ்மக்கள் மிகவும் பின் தங்கியுள்ளது வேதனைகுரிய விஷயமாக உள்ளன என தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி ஜமுனாமுத்தூர் மலைவாழ் மக்களுக்கு நலதிட்ட உதவிவழங்கும் விழாவில் பேச்சு.

இந்தியாவில் 10கோடி மலைவாழ் பொதுமக்கள் உள்ளனர் இதில் 40 லட்சம் மலைவாழ்மக்கள் மிகவும் பின் தங்கியுள்ளது வேதனைகுரிய விஷயமாக உள்ளன என தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி ஜமுனாமுத்தூர் மலைவாழ் மக்களுக்கு நலதிட்ட உதவிவழங்கும் விழாவில் பேச்சு.

இந்தியாவில் 10கோடி மலைவாழ் பொதுமக்கள் உள்ளனர் இதில் 40 லட்சம் மலைவாழ்
மக்கள் மிகவும் பின் தங்கியுள்ளது வேதனைகுரிய விஷயமாக உள்ளன என தமிழக
ஆளுநர் ஆர்.என்.ரவி ஜமுனாமுத்தூர் மலைவாழ் மக்களுக்கு நலதிட்ட உதவி
வழங்கும் விழாவில் பேச்சு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஜமுனமுத்தூரில் அருகே கோவிலூர்
ஊராட்சி வனத்துறை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மத்திய அரசின் விக்சிட்
பாரத் சங்கல் யாத்ரா பழங்குடி மக்களுக்கான நலதிட்ட வழங்கும் விழா மாவடட
ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

முன்னதாக நம் லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்கின்ற பிரச்சார
வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் வனத்துறை பள்ளி மைதானத்தில் வருகை புரிந்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்
ரவிக்கு வரவேற்பு அளித்தனர் பின்னர் வேளாண் உற்பத்தி பொருள் நவதானிய
உணவு வகைகள் கண்காட்சிகளை பார்வையிட்டார்.

இதனையடுத்து பழங்குடி மலைவாழ் பொதுமக்களுக்கு விதை நெல் எரிவாயு
சிலிண்டர் மகளிர்களுக்கு வங்கி கடன் வங்கி கணக்கு துவக்கம் உள்ளிட்ட
நலதிட்ட உதவிகளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
பின்னர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது : தமிழில் அனைவருக்கும்
வணக்கம் என்று கூறி தனது உரையை தொடங்கினார்.
இந்தியாவில் 140 கோடி மக்கள் இருந்தும் துரதிஷ்டமாக இன்னும் வளர்ச்சி
பெறாத பின் தங்கிய நாடாகவே உள்ளது

நம் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் வறுமை பசி பட்டினி என
மக்கள் வறுமையில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்..

உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் 1990ம் ஆண்டு சீனா நம்
நாட்டுடன் ஓரு இணையான சமநிலையில் இருந்தன ஆனால் தற்போது பொருளாதாரத்தில்
இந்தியாவை விட பின்தங்கியுள்ளனர்.

நமது நாட்டின் வளர்ச்சியின் பயணம் மிகவும் வேகம் குறைந்து காணப்படுகிறது
நம் நாட்டில் பள்ளிகள் கல்லூரி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி போன்ற
அனைத்து கட்டிடங்கள் போன்றவர்கள் இன்னும் நம் உயர்ந்த அளவிற்கு வளரவில்லை
வேக குறைந்த சரிவு பாதையில்தான் பயணித்து கொண்டிருக்கின்றோம்.

கடந்த 10 ஆண்டு காலம் வளர்ச்சி பாதையில் இந்தியா பொருளாதாரத்தில்
வளர்ந்துள்ளது என்றால் அதற்குக் முக்கிய காரணம் நம் பிரதமர் நரேந்திர
மோடி

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உலக பொருளாதாரத்தில் இந்திய நாடு 10வது
இடத்தில் இருந்து தற்பொழுது முதல் மூன்று இடத்திற்கு நமது பாரத பிரதமர்
கொண்டுவந்துள்ளார். தற்பொழுது உலக நாடு பொருளாதாரத்தில் நாம் இந்திய நாடு
வளர்ந்துள்ளது

தற்பொழுது பத்தாண்டு கால நம் நாட்டின் வளர்ச்சியை மற்ற நாடுகள் அதனை
உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணம் நம் பிரதமர்
நரேந்திர மோடி தான்

அடுத்த 25 ஆண்டுகளில் அதாவது 2047 ஆண்டில் இந்தியா முழு சுதந்திர பெற்ற
நாடாகவும் தற்சார்பற்ற நாடாகவும் வளர்வதுதான் நமது பிரதமரின் கனவு
திட்டம் என்று இவ்வாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

இறுதியில் ஆளுநர் அனைவரிடமும் பாரத் மாதா கீ ஜெய் ஜெய்ஹிந்த் என தெரிவித்தார்….

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..