திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எஸ்.வி.நகரம் ஊராட்சிக்குபட்ட தசராப்பேட்டை பகுதியை சேர்ந்த தவமணி காமாட்சி தம்பதியினருக்கு பூபாலன் பாலாஜி என்ற 2மகனும் கோமதி என்ற மகளும் உள்ளனர்.
மேலும் இதில் பூபாலனுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் பகுதியை சேர்ந்த காளிப்பிரியா என்பவருக்கு காதல் திருமணம் நடைபெற்று இருவரும் சென்னiயில் போலீசாக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் கோமதி என்பவருக்கும் அரியப்பாடி கிராமத்தை சேர்ந்த மின்சாரதுறை பணியாளர் பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 6 மாதம் முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது கோமதி என்பவருக்கு பேய் பிடித்துருப்பதாகவும் இதனால் காளியம்மன் சிறப்பு மாந்தரீகம் பூஜையை செய்ய தவமணி உள்ளிட்ட ஓரே
குடும்பத்தை சேர்ந்த 6பேர் கடந்த 3 நாட்களாக வீட்டை பூட்டி கொண்டு மாந்தரீகம் செய்து கொண்டிருந்தாக தெரிகின்றன.
மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் தவமணி குடும்பத்தினரை அழைத்தும் வெளியே வரவில்லை இதனால் பொதுமக்கள் சந்தேகமடைந்து கோமதியின் கணவர் பிரகாஷ் உறவினர் மூலம் வீட்டை திறக்க முயன்ற போது வீட்டை திறக்காத ரணத்தினால் பிரகாஷின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஆரணி தாலுக்கா போலீசார் மற்றும் தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் தவமணி வீட்டிற்கு சென்று கதவை திறக்க அறிவுறுத்தினார்கள்.
ஆனால் தவமணி குடும்பத்தினர் வீட்டின் கதவை திறக்க மறுத்துள்ளனர். இச்சம்பவம் ஆரணி சுற்றிவட்டார பகுதியில் காட்டு தீ போல் பரவியதால் பொதுமக்கள் அந்த பகுதியில் குவிந்தனர்.
இதனையொடுத்து போலீசார் ஜே.சி.பி இயந்திரம் மூலம் வீட்டை முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று 6 பேரையும் ஆரணி தாலுக்கா போலீசார் அதிரடியாக மீட்டு எடுக்க முயன்ற போது பிரகாஷ் என்பவர் போலீசாரை தாக்க முயன்றுள்ளார்.
பின்னர் இந்த கைகலப்பில் பிரகா~; வாயில் ரத்தம் கொட்டிபடியே போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் எங்கள் குடும்பத்திற்கு மாந்தரீகம் யாரோ வைத்துள்ளதாகவும் இதனால் பூஜை செய்து எடுக்க போவதாகவும் நாங்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை அதே போல எங்களையும் தொந்தரவு செய்யகூடாத என்று கூறி தவமணி குடும்பத்தினர் போலீசாரிடம் கண்டித்து பேசினார்கள்.
இதனையொடுத்து போலீசார் தவமணி குடும்பத்தினரை மீட்டு எடுத்தனர். நரபலி கொடுக்க முயன்றனரா அல்லது மாந்தரீகம் பூஜை செய்தார்களா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்..
செய்தியாளர் ம.மோகன்ராஜ்