அதிமுக கூட்டணியில் இனி பிஜேபி இல்லை -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

அதிமுக கூட்டணியில் இனி பிஜேபி இல்லை -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் தமிழக முதல்வர் சி.என்.அண்ணாதுரை பற்றி விமர்சித்து பேசினார் அவர் பேசியதற்கு திமுக அதிமுக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சசிகலா போன்றவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் சி.வி.சண்முகம் செல்லூர் ராஜீ போன்றவர்கள் அண்ணாவை பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது என்றும் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அண்ணாவைப் பற்றி பேசினால் பேசுபவர்களின் நாக்கை துண்டித்து விடப்படும் பேசினார்

அதற்கு ஒரு படி மேலே போய் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அண்ணாவை பற்றி அண்ணாமலைக்கு என்ன தெரியும் பாதயாத்திரை என்கின்ற பேரில் வசூல் வேட்டை நடத்தி வருகிறார் என்று நேரடியாக அண்ணாமலையை விமர்சித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் 10 ஆண்டு காலமாக வசூல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேர்மையான போலீஸ் அதிகாரியை பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டியது போல் தான் இருக்கும் என அண்ணாமலை முன்னாள் அதிமுக அமைச்சர்களை விமர்சனம் செய்துள்ளார்

இதனையொடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் : அண்ணாமலை பற்றி நாங்கள் டெல்லியில் பேசினோம் அவரை கண்டிப்பதாக சொன்னார்கள் ஆனாலும் திரும்பத் திரும்ப அவர் மறைந்த தலைவர்களைப் பற்றி பேசி வருகிறார் இனிமேல் ஒருபோதும் அதிமுக பாஜக கூட்டணி இல்லை என்று செய்தியாளர்களிடம் அதிரடியாக தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமைச்சர் அமிஷ்தாவை சந்தித்தது தேர்தல் கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

ஆனால் தமிழகத்தில் அதிமுக பாஜக இடையே விரிசல் ஏற்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..