ஆரணியில் ரூம் போட்டு பைக் திருடிய வாலிபர்கள்.

ஆரணியில் ரூம் போட்டு பைக் திருடிய வாலிபர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் கண்ணமங்கலம் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் தொடர பைக் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

ஆரணி டவுன் கண்ணமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் வீட்டு வெளியில் நிறுத்தபட்ட விலை உயர்ந்த பைக்குகள் மர்மநபர்கள் திருடி செல்கின்றனர்.

இந்நிலையில் ஆரணி டவுன் குப்பன் தெருவை சேர்ந்த சுபாஷ் என்பவர் வழக்கம் போல் தனது பைக்கை வீட்டில் வெளியே விட்டு மீண்டும் காலையில் பார்த்த போது பைக் காணமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இச்சம்பவம் குறித்து ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் பாதிக்கபட்ட நபரை தொடர்ந்து அலைகழித்து வந்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த பாதிக்கபட்ட நபர் தனது நண்பர்களின் உதவியுடன் வீட்டில் வெளியே நிறுத்தபட்ட பைக்கை எந்த சாலை வழியில் கொண்டு சென்றுள்ளனர் என்று அறிந்து சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்துள்ளார்.

இதனை ஆரணி நகர காவல்நிலையத்தில் எடுத்து கூறியும் மேற்கொண்டு போலீசார் விசாரணை உட்படத்தாமல் தொடர்ந்து பாதிக்கபட்ட நபர் சபா~; என்பவரை அலைகழித்துள்ளனர்.
மேலும் விரக்தியடைந்த சுபாஷ் சிசிடிவி காட்சியில் வரும் மர்மநபர்களை தேடும் பணியில ஈடுபட்டு சினிமா காட்சியில் வருவது போல் பாதிக்கபட்ட நபரே கொள்ளையர்களை கண்டுபிடித்தும் பைக் திருடர்கள் ஆரணியில் பைக் திருட லாட்ஜில் ரூம் போட்டு கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் போலீசாரிடம் பைக் திருடர்களை குறித்து புகார் அளித்தும் தற்போது வரையில் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் ஆர்வம் காட்டவில்லை என்பது வேதனைகுரிய விஷயமாக கூறப்படுகின்றன.

மேலும் பைக்கை பறிகொடுத்த நபர் சிசிடிவி காட்சிகளை தேடி அலைந்து இதில் வரும் பைக் திருடர்களை போலீசாரிடம் அடையாளம் காட்டியும் இதுவரையில் பைக் திருடர்களை போலீசார் கைது செய்யவில்லை என்பதால் பாதிக்கபடட நபர் சிசிடிவி காட்சிகளை தற்போது சமூக வளைதலங்களில் வைராலாக்கி உள்;ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..