எம்.பி தரணிவேந்தன் கோரிக்கையை ஏற்று மத்திய அமைச்சர் பதில்
பாராளுமன்றத்தில் நடக் கும் குளிர்கால கூட்டத் தொடரில், “திருவண்ணா மலை மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் உள்ளனர். எனவே, ஆரணியில் உணவு பதப்படுத்தும் மையம் அமைக்கப் படுமா?” என ஆரணி எம்பி தரணிவேந்தன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ரன்வீர் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது : பிரதம மந்திரி கிசான் சம்படா யோஜனா’ என்ற திட்டத்தில், நாடு முழுவ தும் ஆயிரத்து 187 உணவு பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
எளிதில் அழுகக்கூடிய பொருட்கள் அல்லது கெட்டுப்போகும் பால், இறைச்சி, முட்டை, கடல் உணவு வகைகள், சிறு தானியங்கள், வாசனை திரவியம் பொருட்கள், நுகர்வோர் பொருட்கள், உடனடியாக சமைக்கவும், சாப்பிடவும் கூடிய பொருட்களை பதப்படுத்தி வைக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.
தமிழகத்துக்கு ரூ.446 கோடி செலவில் 88 திட் டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.248 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.
இந்த திட்டம் நிறைவேற்றப் பட்டால், 4 லட்சத்து 94 ஆயிரத்து 23 விவசாயிகள் பயனடைவார்கள். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உணவு பதப்படுத்தும் மையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவடைந்தால் ஆரணியில் 4 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.