திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர, உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையிலுள்ள மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், 14 கி.மீ., துாரம் கிரிவலம் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர். இதில், புரட்டாசி மாத பவுர்ணமி திதி, நாளை, 28 மாலை, 6:46 மணி முதல், நாளை மறுநாள், 29, 4:34 மணி வரை உள்ளதால் இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், பவுர்ணமியை முன்னிட்டு, கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் பவுர்ணமி தினமான, 2 நாள் அமர்வு தரிசனத்தை கோவில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது..

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..