முடியை வெட்ட சொன்ன ஆசிரியர் முடிவை தேடிக் கொண்ட மாணவன்…

முடியை வெட்ட சொன்ன ஆசிரியர் முடிவை தேடிக் கொண்ட மாணவன்…

புதுக்கோட்டையில் முடிவெட்டி வரச்சொல்லி வீட்டிற்கு அனுப்பியதால், அரசுப் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விஜயபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணையா – மாரிக்கண்ணு தம்பதிக்கு மகரஜோதி என்ற மகளும், மாதேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.மாதேஸ்வரன், புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகின்றார்

மேலும் மாதேஸ்வரன் அதிகமாக முடி வளர்த்ததால், அவரது தலை முடியை வெட்ட சொல்லி தொடர்ந்து ஆசிரியர்கள் திட்டியதாக கூறப்படுகிறது இருப்பினும் மாணவர் முடிவெட்டாமல் பள்ளிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று பள்ளிக்கு சென்ற மாதேஸ்வரனை முடிவெட்டி விட்டு வரும்படி, தலைமை ஆசிரியர் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், இரவு வரை, மாதேஸ்வரன் வீடு திரும்பவில்லை, பெற்றோரும், உறவினர்களும் ஊர் முழுக்க தேடி உள்ளனர்.

மேலும் பள்ளி அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாதேஸ்வரன் கண்டெடுக்கபட்டார். மேலும்தகவல் அறிந்து வந்த போலீசார் மாதேஸ்வரன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.

ஆனால், பெற்றோர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் அதற்கு உடன்படவில்லை மாணவன் தற்கொலைக்கு தலைமை ஆசிரியர் தான் காரணம் எனவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனையொடுத்து சாலை மறியலிலும் ஈடுபட முயன்ற போது பிரேத பரிசோதனை முடிந்த பிறகு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனால், உறவினர் போராட்டத்தை கைவிட்டனர்.

இதனையடுத்து மாதேஸ்வரனின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைக்கபட்டது. இதனிடையே, மாதேஸ்வரன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் மற்றும் ஆசிரியர் பாரதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..