ஆரணி அருகே அனுமதியின்றி பாஜக கொடி கம்பத்தை வைக்க முயன்றதை போலீசார் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். பின்னர் கிராமத்தில் பதட்டத்தை தணிக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆதனுர் கிராமத்தில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் கட்சி கொடி கம்பம் வைக்க ஆரணி தாலுக்கா போலீசில் பாரதீய ஜனதா கட்சி மண்டல செயலாளர் குணாநிதி என்பவர் அனுமதி கடிதம் வழங்க கோரி மனு அளித்துள்ளார்.
மேலும் மாவட்ட அளவில் பொது இடங்களில் கட்சி கொடி கம்பங்கள் வைக்க அனுமதி மறுக்கபட்டுள்ளன. இதனால் அனுமதி வழங்கபடவில்லை என போலீஸ் வட்டாhரம் கூறப்படுகின்றன.
இந்நிலையில் இன்று பாரதீய ஜனதா கட்சி சார்பில் அனுமதியின்றி ஆரணி அருகே ஆதனூர் கிராமத்தில் கட்சி கொடி கம்பம் நிறுவ ஏற்பாடு செய்யபடுவதாக வந்த புகாரில் ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் சுமார் 100பாலீசார் குவிக்கபட்டு பாரதீய ஜனதா கட்சி கொடிகம்பத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் ஆரணி சுற்றியுள்ள கிராமங்களில் பாஜக சார்பில் கொடி கம்பங்களை வைக்கபடுகின்றதா என போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.