ஆரணி அருகே ஆசிரியர் தாக்கியதில் மாணவனுக்கு வலிப்பு பெற்றோர் பள்ளியை முற்றுகை

ஆரணி அருகே ஆசிரியர் தாக்கியதில் மாணவனுக்கு வலிப்பு பெற்றோர் பள்ளியை முற்றுகை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே துளுவபுஷ்பகிரி கிராமத்தை சேர்ந்த தனியார் பஸ் கண்ரக்டர் குமார் ஜெயகாந்தி தம்பதியினருக்கு 1மகன் 2 மகள்கள் உள்ளனர்.

இதில் பாலகணேஷ் என்ற மகன் ஆரணி அருகே நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகின்றான்.

மேலும் சம்பவமான நேற்று முன்தினம் பள்ளி வகுப்பறையில் மாணவன் பாலகணேஷை சக மாணவருடன் பேசி கொண்டிந்த போது தோளில் கை போட்டதாகவும் இதனால் அரசு பள்ளி விலங்கியல் ஆசிரியர் பூபாலன் என்பவர் பாலகணேசை அழைத்து கன்னத்தில் அறைந்துள்ளார்.

பின்னர் சகமாணவனையும் அழைத்து விசாரித்து மீண்டும் மாணவன் பாலகணேஷை சரமாரியதாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த மாணவன் திடிரென வலிப்பு ஏற்பட்டு மயங்கியுள்ளான்.

இதனையடுத்து பள்ளி நிர்வாகம் மாணவனை மீட்டு நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள டீ கடை மற்றும் பங்க் கடையில் உள்ள மாத்திரையை டீ வாங்கி கொடுத்து மாலை நேரத்தில் பள்ளி வேலை முடித்து பின்பு வீட்டிற்கு மாணவனை அனுப்பியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பாலகணேஷை நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தன்
பேரில் களம்பூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர்.

ஆனால் களம்பூர் காவல்நிலைய போலீசார் புகாரை பெற்று கொள்ள
மறுத்துள்ளதாகவும் பள்ளி நிர்வாகத்திடம் சுமூகமாக பேசி முடித்து
கொள்ளுங்கள் என்று போலீசார் கூறியதாகவும் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளதாக
பாதிக்கபட்ட மாணவனின் பெற்றோர் கூறினர்.

மேலும் பாதிக்கபட்ட மாணவன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியை முற்றுகையிட்டு தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆசிரியர் முன்னிலையில் மாணவனுக்கு பங்க் கடையில் வாங்கி கொடுத்த மாத்திரையை தூக்கி எரிந்து இது நியாயமா எனவும் என் மகனுக்கு எதாவது நேர்ந்தால் யார் பொறுப்பேற்பது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பள்ளி நிர்வாகம் பாதிக்கபட்ட மாணவனின் பெற்றோரை சமரசம் செய்ய முயன்றும் ஏற்க மறுத்து மாணவனை அடித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை விடுத்தார்.

ஆனால் கோரிக்கையை ஏற்க மறுத்து பள்ளி நிர்வாகம் பாதிக்கபட்ட மாணவனின் பெற்றோரை திருப்பி அனுப்பியது. இதனால் பாதிக்கபட்ட மாணவின் பெற்றோர் புலம்பி கொண்டே பள்ளியை விட்டு சென்றனர்.

மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பள்ளியில் மாணவனுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் பாதிக்கபட்ட மாணவனின் பெற்றோர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்….

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..