நீண்ட நாட்களாக இருந்த மக்களின் கோரிக்கையை ஏற்று கண்ணமங்கலம் பேரூராட்சியில் 20லட்சம் மதிப்பீட்டில் நவீன காரிய மேடை அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் 6,66,700 ரூபாய் தனது சொந்த பணத்தை பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் வழங்கினார்..!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியில் மொத்தம் 20000 மக்கள் வசித்து வருகின்றனர்.
கண்ணமங்கலம் பேரூராட்சியில் மாதந்தோறும் 10க்கும் மேற்பட்டோர் இறந்து விடுகின்றனர். இறந்தவர்களுக்கு 16ம் நாள் காரியம் செய்ய கண்ணமங்கலம் நாக நதி ஆற்றங்கரை ஓரமாக போதிய இடவசதி இல்லாத நிலை இருந்து வந்தது. நீண்ட நாட்களாக கண்ணமங்கலம் பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்..
மேலும் தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கண்ணமங்கலம் பேரூராட்சியில் நாகநதி ஆற்றங்கரை ஓரமாக காரியமேடை அமைக்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நவீன காரியமேடை அமைக்கும் பணி தொடங்க உள்ளது..

மேலும் நமக்கு நாமே திட்டத்திற்கு மூன்றில் ஒரு பங்கு தொகையை கட்டினால் 20 லட்ச ரூபாய் ஒதுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகம் அறிவித்ததன் பின்னர் 20 லட்ச ரூபாய்க்கு மூன்றில் ஒரு பங்கு ரூபாய் 6,66,700 தனது சொந்த பணத்தை பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்தனன் நேற்று முன்தினம் வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ், உதவி செயற்பொறியாளர் அம்சா, செங்குட்டுவன், பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, ஆகியோரிடம் வழங்கினார்.
இந்த நவீன காரியமேடையில் குளியலறை வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி, உடைமாற்றும் அரை என அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. என்று பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் கண்ணமங்கலம் பொதுமக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது..
கண்ணமங்கலம் பேரூராட்சியில் 20 லட்ச ரூபாயில் நவீன காரியமேடை அமைக்க மூன்றில் ஒரு பங்கு தொகையான 6,66,700 பணத்தை வழங்கிய பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்தனுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது….