திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஜமுனாமுத்தூர் மலைப்பகுதி கானமலை ஊராட்சிக்குபட்ட 32கிராமங்கள் உள்ளன. இதில் அரசனூர் எலுந்தபட்டு நீர்தொம்பை உள்ளிட்ட சுமாhர் மலை பகுதியில் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல ஆண்டுகளாக சாலை வசதிகளின்றி உள்ளன.
இந்த மலைப்பகுதியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மலைவாழ் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் விவசாயம் மற்றும் கூலி தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் இந்தியா சுதந்திரம் பெற்று இதுவரையில் அரசனூர் எலுந்தபட்டு நீர்தொம்பை ஆகிய கிராமங்களில் சாலைவசதியே கண்டதில்லை எனவும் அரசு வழங்கும் ரே~ன் பொருட்கள் வாங்குவதற்கு சுமார் 10கிலோ மீட்டர் தூரம் உள்ள படவேடு கிராமத்திற்கு சென்று வாங்கி செல்ல வேண்டும் 10கிலோ மீட்டர் சாலைகள் மிகவும் செங்குத்தாகவும் கரடுமுடான பாதையாக உள்ளதால் ரே~ன் பொருட்கள் வாங்க செல்ல முடியவில்லை என்றும் மழை காலங்களில் கரடுமுரடான சாலை மண் சரிந்து ஆபத்தான முறையில் உள்ளதால் கிராமங்களிலேயே முடங்கி கிடக்கும் அவலமும் ஏற்படும் என மலைவாழ் பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதனையொடுத்து சாலைவசதி இல்லாத சூழ்நிலையில் 4 பெண் குழந்தைகளை பெற்ற பெண் இறந்த போது டோலி கட்டி சடலத்தை கொண்டு சென்ற அவலமும் கர்ப்பிணி பெண்ணை டோலி கட்டி சுமந்து வரும் போது கருகலைப்பு ஏற்பட்டு குழந்தை கர்ப்பணி பெண் வயிற்றிலேயே இறந்த சம்பவமும் வி~ வண்டு கடித்து டோலி கட்டி சுமந்து கொண்டு காலதாமதாக வந்ததால் சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்த சம்பவம் போன்ற பல துயர சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இது சம்மந்தமாக மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுநாள் வரையில் எந்த ஓரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்தியா சுதந்திரம் பெற்று எங்கள் கிராமத்தில் இதுவரையில் சாலைவசதியே மலைவாழ் பொதுமக்களாகிய நாங்கள் கண்டத்தில்லை என மனவேதனையுடன் கூறுகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த கானமலை அரசனூர் எலந்தபட்டு நீர்தொம்பை உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வீட்டு மேற்கூரை மீது கருப்பு கொடி கட்டி மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோ~ங்கள் எழுப்பினார்கள்.
பின்னர் சாலை வசதி செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எலந்தபட்டு உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மலைவாழ் பொதுமக்கள் புறக்கணிக்கபடுவதாகவும் வீட்டின் மேற்கூரை கருப்பு கொடி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் வரையில் உள்ளதாகவும் அதுவரையில் எங்களின் போராட்டங்கள் தொடரும் எனவும் மலைவாழ் பொதுமக்கள் ஆவேசமாக கூறினார்கள்.