திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கல்லேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சாண்டி இவரது மனைவி இந்திரா இந்த தம்பதியத்திற்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்திரா ஆரணி அடுத்த கீழ்பட்டு பகுதியில் வசிக்கும் தன் தாயின் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் உள்ள தனது தாயைப் பார்க்க ஆட்டோவில் செல்லும் பொழுது ஆரணி சேத்பட் ரோடு சாலையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென சாலையின் குறுக்கே நாய் வந்ததால் ஆட்டோ நிலை தடுமாறி கண்ணகி நகர் பகுதியில் கவிழ்ந்தது விபத்து ஏற்பட்டது..
ஆட்டோவில் பயணித்த இந்திரா சம்பவ இடத்திலே பலியானார் மேலும் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உடன் பயணித்தவர்கள் காயங்களுடன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
இறந்த இந்திராவின் சட்டத்தை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் குறித்து ஆரணி நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி பகுதியில் தாயைப் பார்க்கச் சென்ற மகளுக்கு நேர்ந்த சோகத்தால் உறவினர்கள் கதறி அழும் காட்சி அனைவரையும் கலங்க வைக்கிறது.