ஆரணியில் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறி ஓப்பந்ததாரர் கடிதம் எழுதி
வைத்து வீட்டில் தூக்கிட்டு தற்கெலை செய்து கொண்டார்.
சடலத்தை கைப்பற்றி
ஆரணி டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் பகுதியை சேர்ந்த
ஜானகிராமன் மகன் புரந்திரன் (60) இவருக்கு காமட்சி என்ற மனைவியும்
ரவிசந்திரன் மூர்த்தி என்ற 2மகனும் பாரதி என்ற மகளும் உள்ளனர்.
மேலும் புரந்திரன் பில்டிங் ஓப்பந்ததாரர் வேலை செய்து வருகின்றார்.
கடந்த
2 மாதங்களுக்கு முன்பு மனைவி காமாட்சி நோய்வாய்பட்டு இறந்துவிட்டார்.
தன்னுடைய மகனுக்கு ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து சம்மந்தமாக நிலுவையில்
உள்ளன.
இதனையொடுத்து தன் மூத்த மகனுக்கு வேறு இடத்தில் பெண்ணை பார்க்க
தெரிந்தவர்கள் மூலம் மீனா என்ற பெண் அறிமுகமாகினார்.
ஆனால் என் மூத்த
மகன் ரவிசந்திரன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டான்.
இதனால் மீனா மற்றும் அவரது உறவினர்கள் என்னை பணம் கேட்டு மிரட்டி வந்தனர்.
இதனால் மன வேதனையடைந்துள்ளதாகவும் இது சம்மந்தமாக கடிதம் எழுதிவிட்டு
என்சாவிற்கு காரணம் மீனா என்றும் கூறி இன்று விடியற்காலையில் புரந்திரன்
வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் புரந்தரனின் மற்றொரு மகன் மூர்த்தி சென்று பார்த்த போது
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தன.
பின்னர் தகவலிறிந்து வந்த ஆரணி டவுன் போலீசார் இறப்பதற்கு முன்பு எழுதி
வைத்த கடித்தத்தை பறிமுதல் செய்து மர்மமரணம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு
செய்து பிரேதத்தை கைப்பற்றி ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.