கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து வார்டுகளின் எண்ணைக்கை 27 ஆக உயர்த்தப்பட்டன.
மேலும் கருமத்தம்பட்டி நகராட்சியில் தற்போது திமுகவை சேர்ந்த நித்யா மனோகர் என்பவர் தலைவராக உள்ளார். திமுக அரசு பொறுப்பு ஏற்று 2 ஆண்டுகள் பின்பு தற்போது கருமத்தம்பட்டி நகராட்சி பகுதிகளில் சாக்கடை கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது
மேலும் 27 வார்டுகளிலும் புதிதாக தார் சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கருமத்தம்பட்டியில் இருந்து எளச்சிபாளையம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் தார் சாலை போடும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் தரமற்ற முறையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
மேலும் இந்த சாலை தரமற்ற முறையில் போடப்படுவதாக கள ஆய்வு செய்த கருமத்தம்பட்டி நகராட்சி துணைத் தலைவர் யுவராஜ் மற்றும் அப்பகுதி சமூக ஆர்வலர் பிரபாகரன் ஆகியோர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர் அதில் தற்போது போடப்பட்டுள்ள தார் சாலையில் உள்ள ஜல்லி கற்கள் அனைத்தும் கைகளால் எடுத்தால் உதிர்ந்து வரும் வீடியோ காட்சிகளையும் தற்போது பதிவிட்டுள்ளனர்.
மேலும் இதே போன்று நகராட்சியில் நடைபெறும் அனைத்து தார் சாலைகளும் தரமற்ற முறையில் உள்ளதால் அந்த ஒப்பந்ததாரருக்கு பணியை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது நேற்று கோவை வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காளப்பட்டி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு தரமான முறையில் சாலைகள் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில் கோவையில் தரமற்ற முறையில் தார் சாலை போடுவதாக வீடியோ வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….