திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் காதல் தகராறு காரணமாக 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை துப்பட்டாவால் கழுத்து இறுக்கி கொலை செய்த தனியார் கம்பெனியில் வேலை செய்யும் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி வந்தவாசி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி வந்தவாசி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந் நிலையில் நேற்று முன்தினம் மாணவி சென்னாவரம் கிராமத்தில் வசிக்கும் பாட்டி வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை இந்த நிலையில் பல இடங்களிலும் தேடியும் மாணவி கிடைக்காததால் பெற்றோர்கள் வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில்
அதே கிராமத்தைச் சேர்ந்த தனியார் கம்பெனியில் வேலை செய்யும் யோகேஸ்வரன் என்பவருக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் காதல் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையொயடுத்து யோகேஸ்வரனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
விசாரணையில் யோகேஸ்வரன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது பாட்டி வீட்டில் இருந்து அருகே உள்ள முட்புதருக்குள் அழைத்து சென்றுள்ளதாகவும் அப்போது இருவருக்கும் காதல் பழக்கத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக யோகேஸ்வரன் துப்பட்டாவால் மாணவியை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டார். இதை அடுத்து போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியை கொலை செய்த யோகேஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்…