ஆரணியில் தடையை மீறி பேருந்தில் ஹர் ஹர்ன் பொருத்திய 25 வாகனங்களிலிருந்து அகற்றி பறிமுதல் செய்து ஆரணி வட்டார போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

ஆரணியில் தடையை மீறி பேருந்தில் ஹர் ஹர்ன் பொருத்திய 25 வாகனங்களிலிருந்து அகற்றி பறிமுதல் செய்து ஆரணி வட்டார போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

ஆரணியில் தடையை மீறி பேருந்தில் ஹர் ஹர்ன் பொருத்திய 25 வாகனங்களிலிருந்து அகற்றி பறிமுதல் செய்து ஆரணி வட்டார போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அரசு பேருந்தில் உடைந்த கண்ணாடி வைத்து கொண்டு பேருந்தை இயக்கினால் தகுதி சான்று ரத்து செய்யபடும் என்று ஆரணி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் எச்சரிக்கை விடுத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலராக சரவணன் என்பவரும் ஆய்வாளராக முருகேசன் என்பவர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆரணி செய்யார் வந்தவாசி சேத்பட் போளுர் உள்ளிட்ட ஆரணி வட்டார போக்குவரத்து உட்பிரிவில் உள்ள சுமார் 206 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன.

மேலும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் ஹர் ஹர்ன் இயக்கபடுவதாகவும் ஏற்கனவே இதற்கு தடை விதிக்கபட்டுள்ளதாகவும் ஆனால் தடையை மீறி வாகனங்களில் பொருத்தபட்டதாக புகாரின் பேரில் ஆரணி வட்டார போக்வரத்து அலுவலர் சரவணன் தலைமையில் அதிகாரிகள் ஆரணி பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 25 வாகனங்களில் பொருத்தபட்ட ஹார் ஹர்ன் அகற்றி பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆப்போது சேலத்திலிருந்து காஞ்சிபுரத்திற்கு செல்லும் அரசு பேருந்து தடம் எண் : 438 கொண்ட பேருந்தில் உடைந்த கண்ணாடி வைத்து கொண்டு பேருந்தை இயக்கியது கண்டு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போக்குவரத்து பணிமனை அதிகாரியை தொடர்பு கொண்டு பேருந்தில் உடைந்த கண்ணாடியை வைத்து கொண்டு இயக்கினால் தகுதி சான்று ரத்து செய்யபடும் என்று வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் தனியார் பேருந்துகளில் சீருடை அணியாமல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்காத பேருந்துகளுக்கு சுமார் 10ஆயிரம் அபராதம் விதித்தனர்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..