திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாராணர்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் ( 70) இவருக்கு 4 மகள் வெங்கடேசன் என்ற 1 மகன் உள்ளனர். இந்நிலையில் பெருமாள் என்பவருக்கு வெங்கடேசன் என்பவருக்கும் சொத்து பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு வந்துள்ளன.
கடந்த 2013ம் ஆண்டு மே11ம் தேதி மீண்டும் தந்தை மகனுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் அன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தை முகத்தில் தலையணை வைத்து அழுத்தி மூச்சி இறுக்கி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.
இந்த வழக்கு ஆரணி கூடுதல் மாவட்ட அமர் நீதிபதி விஜயா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா குற்றம் சாட்டப்பட்ட வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2ஆயிரம் அபராதம் விதித்து தீர்பளித்தார். பின்னர் போலீசார் வெங்கடேசனை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்…