சென்னை கீழ்ப்பாக்கத்தில் எல் போர்டு கொண்ட கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது திடிரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து வந்த நபர் மீது மோதிய விபத்தில் தூக்கி வீசி எரியபட்டு படுகாயமடைந்தார்.
பின்னர் அருகில் உள்ள ஆட்டோவில் மோதி கார் நின்றது. பின்னர் காரை ஓட்டி வந்த ஜெயக்குமாரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்தியதில் பிரேக்கு பதில் தவறுதலாக ஆக்சிலேட்டரை மிதித்தல் வாகனத்தின் வேகம் அதிகரித்து கட்டுப்பபாட்டை இழந்து விபத்துகுள்ளாது என்றும் விசாரணையில் தெரிய வந்தன. படுகாயமடைந்த பழனி என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துவிட்டார்
இச்சம்பவம் குறித்து போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் விபத்து நடந்த சிசிடிவி காட்சி வெளியாகி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…