திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முனுகப்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு பச்சையம்மன் உடனுறை அருள்மிகு மன்னார் சாமி திருக்கோயிலில் ஆடி சோம வார திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மேலும் இந்த ஆடி சோம வார திருவிழா ஜீலை 21ம் தேதி தொடங்கி செப்டம்பர் 1ம் தேதி வரை நடைபெறும். மேலும் சோமவாரம் 2ம் திங்களன்று பார்வதி தவ நிலை அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேலும் வாமுனி, செம்முனி, சிலைகள் அருகே பக்தர்கள் சேவல், கோழி,ஆடு கடா வெட்டி பொங்கல் வைத்து அம்மனுக்கு பச்சை புடவை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
பின்னர் ஸ்ரீ பச்சையம்மன் ஆலயத்தில் பச்சை குங்குமம் பக்தர்களுக்கு பிரசதமாக வழங்கப்படுகிறது. மேலும் ஆலய நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புஷ்ப பல்லக்கு வாகன வீதி உலாவும் அம்மன் திருக்கல்யாணம வைபவமும் நடைபெற்றது.
இதில் ஆரணி செய்யாறு வேலூர் போளுர் சேத்பட் விழுப்புரம் இராணிப்பேட்டை ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாவட்ட மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.