திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள பயணியர்
விடுதியில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜன்
செய்தியாளர்களிடம் பேசியதாவது : கடந்த 2019ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில்
ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றவுடன் கொடிய நோயான கொரோனா தொற்று காரணமாக
2ஆண்டுகள் மக்கள் நலப்பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளன.
மேலும் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளதால் தமிழக அரசு மேலும் 2
ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் உடனடியாக உள்ளாட்சி
தேர்தல் நடத்த வேண்டும்.
மேலும் 100நாள் பணியில் பல இடங்களிலும் சிறப்பு அதிகாரி காலத்தில்
வீடுகட்டும் திட்டத்தில் பலமுறைகேடுகள் நடந்துள்ளது என அனைவருக்கும்
தெரியும் பொதுமக்கள் அதிகாரிகள் நேரில் சென்று பார்ப்பதை விட ஊராட்சி
மன்ற தலைவரை அணுகி திட்டங்களை பெற வழிவகை செய்யும் இவ்வாறு அவர்
கூறினார்.