திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பனையூர் ஊராட்சிக்குபட்ட வடக்குமேடு கிராமத்தில் சுமார் 300குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேலும் வடக்குமேடு ஏரியின் நடுவில் வடக்கு மேடு கிராமத்திலிருந்து ஓட்டதாங்கல் மட்டதாரி வளையாத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சிமெண்ட் சாலை உள்ளன. கடந்த வாரம் பெய்த பெஞ்சன் மழை காரணமாக ஏரியின் உபரி நீர் சாலையை மூழ்கியடித்தது.
இதனால் ஓட்டதாங்கல் வளையாத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கபட்டன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பெரிதும் அவதிகுள்ளாயி கிராமத்திலேயே முடங்கி கிடந்தனர்.
தற்போது ஓரு வாரம் ஆகியும் ஏரி உபரி நீர் வற்றாத காரணத்தினால் வடக்குமேடு இருந்து ஒட்டதாங்கல் செல்லும் சாலை வேறுவழியின்றி கிராம பொதுமக்கள் ஆபத்தான முறையில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் ஏரி மூழ்கிய சாலையை கடந்து செல்லும் அவலமும் ஏற்பட்டுள்ளன.
மாவட்டம் நிர்வாகம் வடக்குமேடு ஓட்டதாங்கல் ஏரியின் நடுவில் சிறு மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.