ஆரணியில் இரவு பகலாக மணல் கொள்ளை யாருடைய எல்லை டவுன் தாலுக்கா போலீசார் மல்லுகட்டி மணல் கொள்ளையரிடம் பேரம் பேசியதால் பொதுமக்கள் அதிர்ச்சி.

ஆரணியில் இரவு பகலாக மணல் கொள்ளை யாருடைய எல்லை டவுன் தாலுக்கா போலீசார் மல்லுகட்டி மணல் கொள்ளையரிடம் பேரம் பேசியதால் பொதுமக்கள் அதிர்ச்சி.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் கமண்டல நதியும் நாகநதி ஆறுகள் உள்ளன.

மேலும் இந்த கமண்டல நாகநதி ஆறு ஆரணி டவுன் பையூர் தச்சூர் மோட்டூர் மேல்சீசமங்கலம் ரகுநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வழியாக செல்லகூடியதாக உள்ளதால் இரவு மற்றும் பட்டபகலில் மணல் மாபியாக்கள் லாரி டிராக்டர் மாட்டுவண்டிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஆரணி டவுன் கமண்டல நாகநதி சுடுகாடு பகுதியில் இரவு நேரங்களில் மணல் மாபியாக்கள் ஜல்லடை மூலம் ஆற்றில் ஜல்லைடை ஜலித்து பின்னர் சாவகாசமாக டிராக்டரில் கொண்டு செல்கின்றனர். மணல் அள்ளும் இடம் டவுன் பகுதியாகவும் கொண்டு செல்லும் இடம் தாலுக்கா போலீஸ் எல்லையாக உள்ளதால் குழப்பத்தில் மணல் மாபியாக்களிடம் பேரம் பேசி கண்டுகொள்ளாமல் போலீசார் உள்ளதால் பொதுமக்கள் அதிரிச்சியடைந்துள்ளனர்.

மேலும் இது சம்மந்தமாக கிராம பொதுமக்கள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் அளித்தும் ஆரணி டவுன் போலீஸ் மற்றும் தாலுக்கா போலீசார் யாருடைய எல்லையில் மணல் கொள்ளை நடைபெறுவது என்று மல்லுகட்டி கண்டு கொள்ளாமல் உள்ளதால் அதிகளவில் தொடர் மணல் கொள்ளையில் மணல் மாபியாக்கள் ஈடுபட்டு வரும் சம்பவம் அறங்கேறி வருகின்றன.

மேலும் பட்டபகலில் கமண்டல நாகநதி ஆற்றில் மணல்கள் ஜல்லடை மூலம் ஜலித்து வைத்திருக்கும் வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வளைதலங்களில் வைரலாகி வருகின்றன. இச்சம்பவம் குறித்து போலீசார் எந்த ஓரு நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..