திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஓரு மாதம் காலமாக லஞ்ச ஒழிப்பு துறையின் அதிரடி நடவடிக்கையால் மாவட்ட அளவில் உள்ள அரசு அலுவலங்கள் அச்சத்தில் உள்ளனர்.
தினந்தோறும் நம் அலுவலகத்தில் லஞ்ச ஓழிப்பு துறையினர் ரெய்டு நடத்துவார்களா என அச்சத்திலேயே பணியாற்றி கூடிய நிலை தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் நடந்தேறி வருகின்றன.
ஆரணி கோட்டை மைதானம் எதிரில் உள்ள வட்டாசியர் அலுவலகத்தில் வட்டாச்சியராக இருந்த மஞ்சுளா கடந்த மாதம் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க 10ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறி லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்யபட்டார்.
இதற்கு உடந்தையாக இருந்த இரவு காவலாளி பாபு என்பவரையும் கைது செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து செங்கம் இறையூர் கிராமத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் பாரதி அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரிடம் வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஓழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
லஞ்ச ஒழிப்பு துறை தொடர் வேட்டையில் சிக்கியது திருவண்ணாமலை சார்பதிவாளர் அலுலகம் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் வரைமுறை படுத்தப்படாத மனைகளுக்கு இடைதரகர்கள் மூலம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக புகாரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திருவண்ணாமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்ட போது கணக்கில் வராத 50ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யபட்டன.
பின்னர் ரிஜிஸ்டர் குமரகுரு உள்ளிட்ட அதிகாரிகளின் செல்போன் பறிமுதல் செய்ததில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளன. பல லட்சம் பணம் பரிவர்தனையும் அம்பலம்
திருவண்ணாமலை சார்பதிவாளர் எல்லைக்குபட்ட இடங்களில் உள்ள வரைமுறை படுத்தபடாத மனைகளுக்கு செல்போனில் கூகுள் போன் பே மூலம் டிஜிட்டல் பணம் பரிவர்தனை நடைபெற்று பல லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றது அம்பலமானது.
இதில் இடைதரகர்கள் பலர் உடந்தையாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளதால் லஞ்ச ஓழிப்பு துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் லஞ்ச ஓழிப்பு துறை டி.எஸ்.பி வேல்முருகன் தலைமையில் லஞ்ச ஓழிப்பு துறையினர் தீவிர அதிரடி வேட்டையில் இறங்கி உள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போலீஸ் துறை வருவாய் பொதுப்பணி துறை பத்திர பதிவு துறை வேளாண்மை துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கதிகலங்கி போய் உள்ளனர்.
லஞ்ச ஓழிப்பு துறையின் நடவடிக்கையால் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன..