வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையை பெற்ற தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ பதவியை இழந்ததாக சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்..
திருக்கோவிலூர் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் பொன்முடி மூன்றாண்டு சிறை தண்டனை விதிப்பால் எம்எல்ஏ தகுதியை இழப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன..
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)-ன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும்கூட தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். அதேபோல், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8(3)-வது பிரிவின் கீழ், ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், சிறை தண்டனை காலத்திலும், அதற்கு பிறகு 6 ஆண்டு காலத்துக்கும் தேர்தலில் போட்டியிட தகுதியில்லை..
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது உடனே, தானாக இந்த சட்டம் அமலுக்கு வந்துவிடும் என்பதன் அடிப்படையில் அமைச்சர் பொன்முடியும் தானாக தகுதியிழப்பு செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது. அமைச்சர் பதவியையும், எம்எல்ஏ என்ற தகுதியையும் இழப்பார் எனச் சொல்லப்படுகிறது. சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கும் இதேபோல் தகுதியிழப்பு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..

தமிழகத்தில், சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அரசு பதவியை இழந்தவர்கள் வரிசையில் மூன்றாவதாக இணைந்துள்ளார் அமைச்சர் பொன்முடி. இதற்கு முன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் பதவி இழந்துள்ளனர். 2014ல் சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். தொடர்ந்து கலவர வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா, பாலகிருஷ்ண ரெட்டி வரிசையில் அமைச்சராக இருந்தேபோதே பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது..