திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தருமராஜா ஆலயத்தில் திமுக மாவட்ட அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் கப்பல் கங்காதரன் தலைமையில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
பின்னர் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் ரேவதி அரசு வட்ட செயலாளர் பாஸ்கரன், ரவி மாணிக்கம், ரமேஷ் இளைஞர் அணி விஜய் மற்றும் ஆலய நிர்வாகிகள் ரேணுகா கங்காதரன், தனசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்…