ஆரணி டவுன் 7வது வார்டுக்கு உட்பட்ட பழைய போலீஸ் ஸ்டேசன் பெரியகடை வீதி முகப்பில் உள்ள பெரிய கால்வாய் ஆபத்தான முறையில் உள்ளதால் நகராட்சிக்கு பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரையில் எந்த ஓரு நடவடிக்கை எடுக்கவில்லை
இதனால் 7வது வார்டு கவுன்சிலர் ராமகிரு~;ணனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் கோரிக்கையை ஏற்று கவுன்சிலர் ராமகிரு~;ணன் ஏற்பாட்டில் பொதுமக்கள் 5வது வார்டு சுதாகுமார் முன்னிலையில் பெரிய கல்லை கொண்டு ஆபத்தான முறையில் உள்ள கல்லை மூடினார்கள். இச்செயல் சமூக வளைதலங்களில் தொடர் சமூக பணியில் ஈடுபட்டு வரும் 5வது வார்டு கவுன்சிலர் சுதாகுமார் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.