திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அத்தியூர் மலைப்பகுதியில் சாராயம் விற்பனை செய்யபட்டு வருவதாக போலீசாருக்கு பொதுமக்களின் தரப்பில் புகார் அளிக்கபட்டன.
மேலும் புகாரின் பேரில் ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜங்கம் தலைமையில் எஸ்.ஐ அருண்குமார் கன்ராயன் உள்ளிட்ட போலீசார் பூசிமலைக்குப்பம் மற்றும் அத்தியூர் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஓரு வாலிபர் பைக்கில் சுமார் 5டியூப்பில் கொண்ட எரிசாராயத்தை கண்ணமங்கலம் நாமகாரமலையிலிருந்து கடத்தி வந்துள்ளார். உடனடியாக அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் சஞ்சய்(25) என்பதும் கண்ணமங்கலம் நாமக்கார மலையில் விற்பனை செய்யபட்டு வந்துள்ள எரிசாராயத்தை டியூப்பில் கொண்டு வரப்பட்டதாகவும் என விசாரணையில் தெரிய வந்தன.
பின்னர் சஞ்சய் என்பவரிடமிருந்து 5டியூப்பில் உள்ள சுமார் 170 லிட்டர் எரிசாராயம் மற்றும் அதற்கு பயன்படுத்தி பைக்கை ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.