முதல்வரின் ஆணையை தவறாக பயன்படுத்தும் மணல் மாபியாக்கள்..!!

முதல்வரின் ஆணையை தவறாக பயன்படுத்தும் மணல் மாபியாக்கள்..!!

மண்பாண்டம் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரின் வாழ்வதாரம் செழிக்க ஏரியில் உள்ள மொரம்பு மண் எடுக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து டிராக்டரில் கூடை மூலம் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் எடுத்து கொள்ள மாவட்ட நிர்வாகம் மூலம் வட்டாச்சியரிடம்  அனுமதி பெற்று 30யூனிட் மண்ணை எடுத்து கொள்ள அனுமதி வழங்கபட்டுள்ளன.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி போளுர் செய்யார் வந்தவசரி உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள மணல் மாபியாக்கள் ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆகியோர் தமிழக முதல்வரின் ஆணையை தவறாக பயன்படுத்தி விவசாய பயன்பாட்டிற்கும் மண்பாண்டம் தொழிலுக்கு மண் தேவை என கூறி வருவாய் துறை மற்றும் போலீசாhருக்கு லஞ்சம் கொடுத்து பட்டபகல் மற்றும் இரவு நேரங்களில் ஜேசிபி இயந்திரம் நீண்ட வரிசையில் லாரிகள் மூலம் மண் அள்ளும் பணி படுஜோராக நடைபெற்று வருகின்றன.  

மேலும் ஆரணி அருகே ஆகாரம் கிராமத்தில்; ஜேசிபி இயந்திரம் மூலம் 15 டிராக்டரில் விவசாய பயன்பாட்டிற்கு என கூறி அனுமதி பெற்றதை விட  அளவிற்கு அதிகமாக மொரம்பு மண் அள்ளினார்கள். 

இதனை கண்ட கிராம பொதுமக்கள் ஆகாரம் வி.ஏ.ஓ வெங்கடேசனிடம் புகார் அளித்து வி.ஏ.ஓ வெங்கடேசன் நேரில் சென்று மண் அள்ளுவதை தடுத்து நிறுத்தி முயன்றார் ஆனால் இதனை மணல் மாபியாக்கள் அலட்சியபடுத்தி தொடர்ந்து மண் அள்ளும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம பொதுமக்கள் புகார் அளித்த பின்பு சம்பவடத்திற்கு சென்ற போலீசார் ஜேசிபி இயந்திரம் மற்றும் டிராக்டர்களை பறிமுதல் செய்தனர் ஆனால் இதுவரையில் வழக்கு பதிவு செய்யாமல் ஆரணி தாலுக்கா போலீசார் வழக்கை இழுத்துடித்து வருகின்றனர். 

இது சம்மந்தமாக கேட்டதற்கு வருவாய் துறையினர் இதுவரையில் புகார் அளிக்கவில்லை என்பதால் இந்த வழக்கின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று போலீசார் தரப்பில் கூறப்படுகின்றன. தமிழக முதல்வர் விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் தொழிலாளர்களின் வாழ்வதாரத்திற்கு அனுமதி வழங்கபட்ட மண் தற்போது மணல் மாபியாக்கள் ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் பெட்ரோல் பங்க் நிரப்பவதற்கும் செங்கல் சூளைக்கும் மற்றவைக்கும்  பயன்படுத்தி தங்களின் பணிக்கு பயன்படுத்துவது விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிக்கபடுவதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

தமிழக முதல்வரின் ஆணையை தவறாக பயன்படுத்தும் மணல் மாபியாக்கள் மீது சட்டபடி நடவடிக்கை பாயுமா என விவசாயிகள் கோரிக்கை…

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..