78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரதீய ஜனதா கட்சி சார்பில் இருசக்கர பேரணி நிகழ்ச்சி மத்திய அரசு நலதிட்ட பிரிவு மாநில செயலாளர் சைதை வ.சங்கர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்த பேரணியில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஹெல்மட் அணிந்து ஆரணி டவுன் அம்பேத்கர் சிலை அருகே இருசக்கர பேரணியை மத்திய அரசு நலதிட்ட பிரிவு மாநில செயலாளர் சைதை. வ.சங்கர் கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி காந்தி ரோடு மார்க்கெட் வீதியாக வந்து காமராஜ் சிலை வரையில் வந்தடைந்தனர். பின்னர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வந்தே மாதரம் வந்தே மாதரம் என கோஷங்கள் எழுப்பினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் தீனன் மாவட்ட செயலாளர் சதிஷ் நகர தலைவர் ஜெகதீசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.