ஆரணி அருகே மின் கம்பி உரசி நெல் அறுவடை இயந்திரம் தீயில் கருகி நாசம்

ஆரணி அருகே மின் கம்பி உரசி நெல் அறுவடை இயந்திரம் தீயில் கருகி நாசம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அரியப்பாடி கிராமத்தில் விவசாயி ராமன் என்பவர் விலைநிலத்தில் நெல்பயிர் வைத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.

மேலும் அறுவடை இயந்திரம் மூலம் நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது விவசாய நிலம் பகுதியில் தாழ்வாக சென்ற மின்சார கம்பி மீது நெல் அறுவடை இயந்திரம் உரசியதால் எதிர்பாராத விதமாக நெல் அறுவடை இயந்திரம் தீப்பற்றி தீ மளமளவென எரியத் தொடங்கியது.

இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர்.

பின்னர் தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இந்த தீ விபத்தில் நெல் அறுவடை இயந்திரம் எரிந்து சேதமானது.

இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுக்கா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..