தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது நாளை திருவண்ணாமலையில் மகா தீபம் நடைபெறும் நிலையில் பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது இது போன்ற மழையால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன
ஆரணி டவுன் பகுதியில் பல இடங்களில் மின்சாரம் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் ஆரணி அருகே முள்ளிப்பட்டு ஊராட்சிக்குபட்ட உட்பட்ட சக்தி நகர் குடியிருப்பு பகுதியில் அருகே உள்ள நாயக்கன்பாளையம் ஏரிகள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது
இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பில் இருந்து வெளிய வர முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் உடனடியாக அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று அந்த நீரை வெளியேற்றி பொதுமக்களை அங்கிருந்து மீட்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்…